Home CRIME NEWS அக்காவை அடித்த அத்தானை கத்தரிக்கோலால் 4 முறை பதம் பார்த்த தம்பி! தலைமறைவான தம்பியை தேடுகிறது...

அக்காவை அடித்த அத்தானை கத்தரிக்கோலால் 4 முறை பதம் பார்த்த தம்பி! தலைமறைவான தம்பியை தேடுகிறது பொலிஸ்.

கணவன் தாக்கியதில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணை பார்க்க சென்றிருந்த கணவன் மீது பெண்ணின் சகோதரன் கத்திரிக்கோலால் குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

குறித்த சம்பவம் பாணந்துறை தெற்கு பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மனைவியின் மூத்த சகோதரரே (மைத்துனர்) அவரைக் கத்திரிக்கோலால் குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

வயிற்றிலும் முதுகிலுமாக நான்கு இடங்களில் காயங்களுக்குள்ளான நபர் பாணந்துறை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். தப்பிச் சென்ற சந்தேக நபர் வைத்தியசாலைக்குரிய கத்தரிக்கோலை பயன்படுத்தியே

தனது மைத்துனரை தாக்கியமையும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

READ MORE >>>  நான்கு பிள்ளைகளிள் தந்தை கொடூரமாக வெட்டி கொலை
Previous articleகுளவி கொட்டுக்கு இழக்காகி 17 மாணவர்கள் பாதிப்பு!
Next articleமதுபோதையில் வந்த காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு மூக்குடைவு – யாழில் சம்பவம்