Home கனேடிய செய்திகள் கனடாவில் காணாமல்போயுள்ள தமிழ் இளைஞர்: புகைப்படத்தை வெளியிட்டு உதவிகோரியுள்ள பொலிஸார்

கனடாவில் காணாமல்போயுள்ள தமிழ் இளைஞர்: புகைப்படத்தை வெளியிட்டு உதவிகோரியுள்ள பொலிஸார்

கனடாவில் எட்டு மாதங்களுக்கு முன்னர் காணாமல்போயுள்ள இளைஞர் தொடர்பில் புகைப்படத்தை வெளியிட்டு பொலிஸார் உதவிகோரியுள்ளனர்.

வெங்கடேஷ் கண்ணதாசன் என்ற 31 வயதான இளைஞரே கடந்தாண்டு செப்டெம்பர் மாதம் 6 ஆம் திகதி முதல் காணாமல்போயுள்ளார்.

இந்நிலையில், குறித்த இளைஞர் தொடர்பில் அவரின் புகைப்படம் உள்ளிட்ட விபரங்களை வெளியிட்டு ரொறன்ரோ பொலிஸார் உதவிகோரியுள்ளனர்.

இவர் 6 அடி 3 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும், தாடி,மூக்கு கண்ணாடி அணிந்திருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வெங்கடேஷை காணவில்லை என நேற்றைய தினமே பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கான காரணம் இன்னும் தெளிவாக தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

22 62782afce1226 | கனடாவில் காணாமல்போயுள்ள தமிழ் இளைஞர்: புகைப்படத்தை வெளியிட்டு உதவிகோரியுள்ள பொலிஸார் 22 6278421add684 | கனடாவில் காணாமல்போயுள்ள தமிழ் இளைஞர்: புகைப்படத்தை வெளியிட்டு உதவிகோரியுள்ள பொலிஸார்

READ MORE >>>  இலங்கை தமிழர் வரலாறு பற்றி இதுவரை அறியப்படாத புதிய கல்வெட்டு திருகோணமலையில் கண்டுபிடிப்பு - பேராசிரியர் ப.புஸ்பரட்ணம்
Previous articleதிருகோணமலையில் அவசரகால சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
Next articleயாழில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது