Home தற்கொலை செய்திகள் காணாமல் போன காதலன்!! 19 வயதுடைய யுவதியின் விபரீத முடிவு

காணாமல் போன காதலன்!! 19 வயதுடைய யுவதியின் விபரீத முடிவு

மாத்தறை – கம்புருபிட்டிய, மீபாவிட்ட, ரன்சகொட பிரதேசத்தினை சேர்ந்த 19 வயதுடைய யுவதி ஒருவர் தவறான முடிவை எடுத்து உயிரிழந்துள்ளார்.

குறித்த யுவதி நில்வள கங்கையின் கிளை ஆறான கிரமாரா ஓயாவில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை, மாத்தறை, பிட்டபெத்தர, நில்வள கங்கையில் நேற்று நீராடச் சென்று காணாமல்போன நான்கு இளைஞர்களில் மூவரின் சடலங்கள் கடற்படையின் நீர்மூழ்கிக் குழுவினரினால் நேற்று கண்டெடுக்கப்பட்டது.

எனினும் காணாமல்போயுள்ள மனுஷ்க யோஹான் என்பவரின் சடலம் இதுவரை கண்டுபிடிக்க முடியாத நிலையில், தேடுதல் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த இளைஞனின் காதலியே இவ்வாறு நில்வள கங்கையில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

READ MORE >>>  போராட்டததை பிளவுப்படுத்த அவன்கார்ட் தலைவர் 10 கோடியா??
Previous articleஇன்றைய ராசிபலன் – 28/08/2022, கும்ப ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்..
Next articleகளுத்துறை கடற்கரையில் நிர்வாணமாக கரையொதுங்கிய சடலம்