Home Tamil News குருதிக்கொடை வழங்கலிலும் புலனாய்வாளர்கள் கெடுபிடி!

குருதிக்கொடை வழங்கலிலும் புலனாய்வாளர்கள் கெடுபிடி!

மாவீரர் நாளை முன்னிட்டு இரத்ததான முகாம் ஒன்று முல்லைதீவு இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 09 மணி முதல் முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்தியசாலையில் உள்ள இரத்த வங்கியில் இந்த இரத்ததான முகாம் இடம்பெற்றுள்ளது.

சமூக வலைத்தளம் மூலம் விடுக்கப்பட்ட அறிவித்தலின் அடிப்படையில் தன்னார்வமாக இணைந்த இளைஞர்கள் பலர் இரத்ததான முகாமில் ஆர்வத்துடன் பங்கேற்றிருந்தனர்.

இவ்வாறு இரத்ததானம் இடம்பெற்றுக்கொண்டிருந்த நேரத்தில் இரத்த வங்கிக்கு சென்றிருந்த புலனாய்வாளர்கள் தாமும் இரத்தம் வழங்க போவதாக பாசாங்கு செய்து இரத்ததானம் வழங்கிய இளைஞர்களை புகைப்படம் எடுக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

அத்தோடு இரத்ததானம் தொடர்பில் கார்திகைப்பூ பொறித்த இலட்சனை ஒன்றினை தமது ஆடையில் அணிந்தவாறு இரத்ததான முகாமில் கலந்துகொண்டிருந்த இளைஞர்களை அங்கு வந்த காவல்துறையினர் அழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

READ MORE >>>  மாணவனின் செவிப்பறை பாதிக்க காதில் அறைந்த ஆசிரியர் – யாழ்.நகர பாடசாலையில் சம்பவம்
Previous articleயாழில் வீதியில் போகும் பெண்களுக்கு பாலியல் சீண்டல்கள் கொடுக்கும் போதை பொருள் பாவிக்கும் இளைஞர்கள்! : அச்சத்தில் மக்கள்!
Next articleஇன்றைய ராசிபலன் – 26/11/2022, கடக ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்..