Home Local news குளவி கொட்டுக்கு இழக்காகி 17 மாணவர்கள் பாதிப்பு!

குளவி கொட்டுக்கு இழக்காகி 17 மாணவர்கள் பாதிப்பு!

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட லிந்துலை சரஸ்வதி ரோயல் கல்லூரியின் மாணவர்கள் 17 பேர் இன்று மதியம் 2.30 மணியளவில் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலையில் இருந்த வேளையில் அப்பகுதியில் இருந்த மரத்தில் காணப்பட்ட குளவி கூடே இவ்வாறு கலைந்து வந்து மாணவர்களை கொட்டியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்போது குளவி கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் ஆரம்ப பிரிவைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் பிள்ளைகள் என பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

குளவி கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் தொடர்ந்தும் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

FB IMG 1669634267955 1 | குளவி கொட்டுக்கு இழக்காகி 17 மாணவர்கள் பாதிப்பு! FB IMG 1669634265500 | குளவி கொட்டுக்கு இழக்காகி 17 மாணவர்கள் பாதிப்பு! FB IMG 1669634262960 | குளவி கொட்டுக்கு இழக்காகி 17 மாணவர்கள் பாதிப்பு! FB IMG 1669634260560 | குளவி கொட்டுக்கு இழக்காகி 17 மாணவர்கள் பாதிப்பு!

READ MORE >>>  Zoom class ல் இருந்த சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்
Previous articleசெல்போன் நிறுவன அதிகாரிகள் போல நடித்த கும்பல் செல்போன் கோபுரத்தை திருடி சென்றது
Next articleஅக்காவை அடித்த அத்தானை கத்தரிக்கோலால் 4 முறை பதம் பார்த்த தம்பி! தலைமறைவான தம்பியை தேடுகிறது பொலிஸ்.