Home திருகோணமலை செய்திகள் திருகோணமலை சேருநுவர பகுதியில் பேருந்து குடைசாய்ந்ததில் அறுவர் படுகாயம்

திருகோணமலை சேருநுவர பகுதியில் பேருந்து குடைசாய்ந்ததில் அறுவர் படுகாயம்

திருகோணமலை சேருநுவர பகுதியில் பேருந்து குடைசாய்ந்ததில் அறுவர் படுகாயம்

திருகோணமலை மாவட்டத்தின் சேரு நுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பேருந்து ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் காயங்களுடன் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ் விபத்துச் சம்பவம் இன்று (24) காலை இடம்பெற்றுள்ளது.

குருணாகலையிலிருந்து திருகோணமலைக்குச் சென்ற சுற்றுலா பயணிகள் பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குருணாகல் மற்றும் நாரம்பல பகுதியைச் சேர்ந்த மூன்று பெண்களும், இரண்டு ஆண்களும், ஒரு சிறுவருமே காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குருணாகலையிலிருந்து திருகோணமலை சேருவில விகாரையை பார்வையிட்டு குருணாகலுக்கு திரும்பும் போதே பேருந்து குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 22 62171d81970aa | திருகோணமலை சேருநுவர பகுதியில் பேருந்து குடைசாய்ந்ததில் அறுவர் படுகாயம்

READ MORE >>>  விடுதலை புலிகளின் பிரிகேடியருக்கு யாழில் அஞ்சலி
Previous articleரிதீகம பகுதியில் தலைக்கவசத்தால் அடித்து பெண் படுகொலை
Next articleசிரேஷ்ட ஊடகவியலாளர் பந்துல பத்மகுமார காலமானார்