Home Tamil News நெருப்பில் சூடு வைத்து தொடையில் பெயர் பொறித்த பாடசாலை மாணவிகள்!

நெருப்பில் சூடு வைத்து தொடையில் பெயர் பொறித்த பாடசாலை மாணவிகள்!

பாடாலை மாணவிகள் சிலர் தமது தொடையில் ஆங்கில எழுத்துக்கள் பொறித்த நிலையில், பாடசாலை நிர்வாகத்தினால் எச்சரிக்கப்பட்டனர்.

கிளிநொச்சி, பளை பகுதியிலுள்ள பாடசாலை யொன்றில் சில வாரங்களின் முன்னர் இந்த சம்பவம் நடந்தது.

15 வயதான மாணவிகள் சிலர் தமது தொடையில் ஆண் நண்பர்களின் பெயரை பொறித்துள்ளதாக பாடசாலை நிர்வாகத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் 5 மாணவிகள் அடையாளம் காணப்பட்டனர்.

அவர்கள் பெயர் பொறிக்கவில்லை. ஆங்கில எழுத்துக்களை மட்டுமே பொறித்திருந்தனர். குறிப்பிட்ட பெயர்களின் சுருக்கமாக அவை இருக்கலாமென பாடசாலை நிர்வாகம் சந்தேகித்தது.

நெருப்பில் சூடு வைத்து அந்த எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன.

இதையடுத்து மாணவிகள் எச்சரிக்கப்பட்ட, பெற்றோர் அழைக்கப்பட்டு அறிவுரை கூறி அனுப்பி வைக்கப்பட்டனர்.

READ MORE >>>  கனடாவில் உயர்பதவியில் இருந்து உயிரிழந்த தமிழனுக்கு முல்லையில் அஞ்சலி
Previous articleகனடாவிற்கு கணவனை அனுப்பிவிட்டு திரும்பிய கிளிநொச்சி புதுமணப்பெண், வாகன சாரதியுடன் மாயம்!
Next articleயாழில் பாடசாலைக்கு அருகில் மலக்கழிவுகளை வீசிய நபர்