பளைப் பகுதியில் பஸ்ஸில் இருந்து தாதிய உத்தியோகத்தர் தவறி விழுந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ். போதனா வைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தராகக் பணியாற்றிவந்த கொடிகாமம், மீசாலை பகுதியைச் சேர்ந்த குகதாசன் விமல்ராஜ் என்ற தாதிய உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த பஸ் பளைப் பகுதியில் வீதியின் நடுவே நின்ற மாட்டைக் காப்பாற்ற முற்பட்ட வேளையில் குறித்த தாதிய உத்தியோகத்தர் பஸ்ஸில் இருந்து தவறி வீதியில் விழுந்து படுகாயமடைந்திருந்தார்.
பின்னர் குறித்த உத்தியோகத்தர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு மரணமடைந்தார்.
மரண அறிவித்தல் ;-
யாழ் போதனா வைத்தியசாலையில் விடுதி இலக்கம் 19 ( Eye ward ) இல் தாதிய உத்தியோகத்தராக கடமை புரியும் K. Vimalraj அவர்கள் நேற்றிரவு (05.11.2022, 11.40pm ) விபத்து ஒன்றில் அகால மரணமடைந்துவிட்டார்.
அன்னாரது பிரிவால் ஆறாத்துயர் அடைந்துள்ள குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
தகவல்;-
நண்பனது பிரிவால் ஆறாத்துயரில் வாடும்..2006 || பிரிவு தாதிய உத்தியோகத்தர்கள்.