Home Lifestyle புருஷன் செத்து ரெண்டு வருசம் கூட ஆகல அதுக்குள்ள எவன மயக்க இப்டி மேக்கப் போட்டு...

புருஷன் செத்து ரெண்டு வருசம் கூட ஆகல அதுக்குள்ள எவன மயக்க இப்டி மேக்கப் போட்டு திரியிறாளோ என்ற குரலை கடந்து பேருந்து நிறுத்தம் வந்தாள் அவள்

புருஷன் செத்து ரெண்டு வருசம்

புருஷன் செத்து ரெண்டு வருசம் கூட ஆகல அதுக்குள்ள எவன மயக்க இப்டி மேக்கப் போட்டு திரியிறாளோ
என்ற குரலை கடந்து பேருந்து நிறுத்தம் வந்தாள் அவள்..

ஆன்ட்டி செம்ம கட்டடா, புருஷன் வேற செத்துட்டானாம் ட்ரைப் பண்ணி பார்ப்போம் என்றபடியே வந்த கல்லூரி இளைஞனின் குரலை கேட்டும் கேளாதது போல பேருந்தில் ஏறினாள்

புருஷன் செத்து ரெண்டு வருசம்

மூச்சுத் திணற வேர்வையோடு நின்று கொண்டிருந்தவளின் பின்னாலிருந்து ஒருவன் மெதுவாக உரசுகிறான் என்பதை புரிந்து கொண்டு நகரும் போதே கம்பிகளை பிடிப்பது போல இன்னொருவன் முன்னால் உரசிச் சென்றான் இறங்கும் போது சிலர் இடுப்பில் உரசினார்கள்

இறங்கும் இடம் வந்தது நடந்து செல்லும் வழியில் ஆட்டோ ஸ்டாண்ட்டில் இருந்தவர்களின் பார்வை அவளின் கழுத்துக்கு கீழே போனதை கண்டும் காணாதது போல அலுவலகம் நுழைந்தாள்

புருஷன் செத்து ரெண்டு வருசம்

மேனேஜரிடமிருந்து அழைப்பு மணி வந்தது உள்ளே நுழைந்தால் என்ன மேடம் நைட்டு போன் பண்ணேன் எடுக்கவே இல்லை நீங்க

என்ன விசயம் சார்?

ஒண்ணுமில்லை என் ஒயிப் குழந்தைங்கெல்லாம் ஊருக்கு போய்ட்டாங்க அதான் சும்மா பேசிட்டு இருக்கலாம்ன்னு கூப்பிட்டேன்

ஓஓ சரி நீங்க ஊருக்கு போய்ட்டா உங்க ஒய்ப் – யாரு கிட்ட சார் பேசுவாங்க என்றபடியே வெளியேறினாள்

புருஷன் செத்து ரெண்டு வருசம்

மாலை வீடு திரும்பினாள் உடம்பு முடியாத அம்மாவுக்கும் கல்லூரி சென்ற தம்பி தங்கைகளுக்கு சமைத்து பாத்திரம் வெளக்கி தூங்க போகும் முன் கொஞ்சம் டென்சன குறைக்கலாம்ன்னு முகநூலை திறந்தாள்

READ MORE >>>  கொழும்பில் பயணிகள் பேருந்து மீது தாக்குதல்! மகிந்த ஆதரவாளர் மீது கடுமையாக தாக்குதல்

Hi, how r u .. I love u.. Please kiss me.. மீட் பண்ணலாமா.. நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க.. பேசமாட்டியாடி.. ரொம்ப சீன் போடாத.. உன் புருசன் இல்லையே உனக்கு மூடு வந்தா என்ன பண்ணுவ

— என்ற வார்த்தைகளால் இன்பாக்ஸ் நிரம்பி வழிந்தது

ஆண்கள் என்றால் பெண்ணின் அனுமதி இல்லாமல் உரசுவான் இடிப்பான்
கணவனை இழந்து பிரிந்து வாழ்கிற பெண்களுக்கெல்லாம் இதே நிலைமை தானா

எதிர்கால துணையை தேர்ந்தெடுக்கும்போது

ஒருவன் கூட உண்மையான காதலை உணர்த்தவே மாட்டானா – என்றபடியே தூங்கி போனாள்…

இது தான் இன்றைய சில பெண்களின் நிலைமை குடும்ப கஷ்டத்தை உணர்ந்து வேலைக்கு போற பெண்கள்கிட்ட தப்பா நடக்குற ஆண்கள் ஆண்கள் என்றே சொல்லவே தகுதியில்லாதவர்கள்னு அர்த்தம்..

நிஜ வாழ்க்கைல ரொம்ப காயப்பட்டு தான் முகநூல் வராங்க இங்கையும் அவங்களை கஷ்டப்படுத்தாதிங்க உண்மையான அன்பு , பாசம் , காதல் இதுக்காக தான் பெண்கள் மட்டுமில்ல உலகத்துல எல்லாரும் ஏங்குறாங்க காதல்னா நீங்க உடனே தப்பா நினைச்சா உங்கள விட அடி முட்டாள் யாரும் இல்ல…

weeding 1 | புருஷன் செத்து ரெண்டு வருசம் கூட ஆகல அதுக்குள்ள எவன மயக்க இப்டி மேக்கப் போட்டு திரியிறாளோ என்ற குரலை கடந்து பேருந்து நிறுத்தம் வந்தாள் அவள்

காதல்னா பெண்ண ஆணோ ஆணோ பெண்ணோ கட்டிப்பிடிக்கிறது முத்தம் கொடுக்குறது இல்ல காதல் ஒரு உணர்வு உடல் ஆசைக்கும் உள்ள உணர்ச்சிக்கும் மேல ஒரு ஆத்ம உணர்வு அத புரிஞ்சவங்க அதிகமா இங்கே இல்லை

பெண்கள ஏன் அப்படி தப்பா பாக்குறீங்க அவங்க கிட்ட அப்படி என்ன இருக்கு அவங்களும் நம்மல மாதிரி ஒரு மனித உயிர் தான் பாசத்துக்காக ஏங்குறாங்க அதுக்காக தப்பு பண்ண கூப்பிடுறதை விட கேவலம் வேற எதுவும் இல்ல..

READ MORE >>>  வாழ்க்கை கொடுத்த வள்ளல்

பெண்கள்னா ஆசைக்காக ஏங்குறவங்கனு நினைக்குற நாய்ங்களுக்கு எங்க புரியுது அவங்க அம்மா , அக்கா , தங்கச்சியும் பெண்கள் தான்னு

எதிர்கால துணையை தேர்ந்தெடுக்கும்போது

முகநூல்ல தப்பா பேசுனா பெண்களும் அப்படி பேசுவாங்கனு நினைக்கிறிங்க வேற ஒருத்தன் உங்க அம்மா , அக்கா , தங்கச்சிகிட்ட இப்படி பேசுனா நீயும் திருப்பி பேசுமானு சொல்விங்களா….

பெண்கள தப்பா பாத்தது போதும் அவங்க இல்லனா நம்ம யாரும் இங்க இல்ல..

உணர்வுகள அடக்க தெரியாதவன் ,,, தான் ஆண்மகன் என்று சொல்றதுக்கே தகுதி இல்லாதவன் இதுக்கு மேல உங்க இஷ்டம்…..!!

Womens desire what men should do 1 | புருஷன் செத்து ரெண்டு வருசம் கூட ஆகல அதுக்குள்ள எவன மயக்க இப்டி மேக்கப் போட்டு திரியிறாளோ என்ற குரலை கடந்து பேருந்து நிறுத்தம் வந்தாள் அவள்

சில நல்ல ஆண்களும் இருக்காங்க நா இல்லனு சொல்லல ஒரு பெண் கஷ்டப்படுத்தப்படும் போது அத கேள்வி கேக்க தைரியம் இல்லாமல் வேடிக்கை பாக்குறவன் ஒரு நல்ல ஆம்பள என்று சொல்லவே தகுதி இல்லாதவன்..

தப்பு பண்றவன விட அத வேடிக்கை பார்த்துட்டு அமைதியா இருக்கவன் ரொம்ப கேவலமானவன்.

புருஷன் செத்து ரெண்டு வருசம்

Previous articleஅனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் 20.02.2022
Next articleஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் இலங்கை மீது மேலும் குற்றச்சாட்டுகள்