Home Local news தனியார் கல்வி நிலைய பெண்கள் மலசல கூடத்தில் கமரா; அரச பகுப்பாய்வுத் திணைக்களத்திடம் விரிவான அறிக்கை...

தனியார் கல்வி நிலைய பெண்கள் மலசல கூடத்தில் கமரா; அரச பகுப்பாய்வுத் திணைக்களத்திடம் விரிவான அறிக்கை கோரல்

கம்பஹா தனியார் கல்வி நிறுவனமொன்றில் உள்ள பெண்கள் மலசல கூடத்தில் காணப்பட்ட கமரா தொடர்பில் விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு கம்பஹா நீதிவான் மஞ்சுள கருணாரத்ன அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு இன்று உத்தரவிட்டுள்ளார்.

இந்தக் கருவியைப் பயன்படுத்தி ஒளிப்படங்கள் அல்லது காணொளியை எடுக்க முடியுமானால், அந்தக் காட்சிகளை வெளிப்புறக் கருவி மூலம் கையாளலாம் அல்லது சேமிக்கலாம் என்பது பற்றிய விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

கம்பஹா தனியார் கல்வி நிறுவனமொன்றின் பெண்கள் மலசல கூடத்தில் உள்ள கமரா ஒன்றரை அங்குல நீள கேபிள் மற்றும் பவர் பாங்க் என்பன சான்றுப்பொருளகளாக நீதிமன்றில் முன்வைக்கப்பட்டன.

குறித்த உபகரணங்களை அரச பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்குமாறு பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அந்த சாதனம் என்ன? இது என்ன செயல்பாடுகளைச் செய்ய முடியும்? இந்த சாதனம் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதா? இல்லை என்றால் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டதா? இந்த அறிக்கையை விரைவில் கம்பஹா நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு நீதிமன்றம் பணிப்புரை விடுத்துள்ளது.

கம்பஹா தனியார் கல்வி நிறுவனமொன்றில் உள்ள பெண்கள் மலசல கூடத்தில் காணப்பட்ட கமரா தொடர்பில் விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு கம்பஹா நீதிவான் மஞ்சுள கருணாரத்ன அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு இன்று உத்தரவிட்டுள்ளார்.

இந்த மலசல கூடத்தில் சிசிரிவி கமராவை பொருத்தியது யார் என்பது தெரியவரவில்லை என பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் நடந்த தனியார் கல்வி நிறுவன வளாகத்தில் அமைந்திருந்தால் அதற்கு நிர்வாகம் பொறுப்பேற்க முடியாது என நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து உடனடியாக நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு, பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனியார் கல்வி நிலையத்தின் மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள், பெற்றோர்கள் மற்றும் நிர்வாகம் உள்ளிட்டோரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.

READ MORE >>>  பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட ரஷ்ய சுற்றுலா பயணி!! 28 வயதுடைய நபர் கைது
Previous articleசட்டவிரோத மணல் அகழ்வு : கனரக வாகனங்கள், உழவு இயந்திரங்களுடன் சாரதிகள் கைது
Next articleவிடுதலைப் புலிகளின் தலைவரின் வெற்றுடலையே இராணுவத்தினர் மீட்டனர்: அவர் மீது தனிமரியாதை உண்டு: சரத் பொன்சேகா