Home jaffna news யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் ரயில் நிலைய கடவையில் கடுகதி ரயிலில் மோதி இளைஞன் பலி

யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் ரயில் நிலைய கடவையில் கடுகதி ரயிலில் மோதி இளைஞன் பலி

யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் ரயில் நிலைய கடவையில் கடுகதி ரயிலில் மோதி இளைஞன் பலி

கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த கடுகதி ரயில் இன்று நண்பகல் 12 மணியளவில் மா விட்டபுரம் புகையிரத நிலையத்தை கடக்க முற்பட்ட போது, குறித்த இளைஞர் மோட்டார் சைக்கிளில் புகையிரத கடவையை கடக்க முற்பட்டுள்ளார்.

இதன்போது கடுகதி ரயில் இளைஞரை மோதி தள்ளியுள்ளது.

உயிரிழந்த இளைஞன் மோட்டார் சைக்கிளில் விறகு ஏற்றிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

மாவிட்டபுரம்

பண்டத்தரிப்பு சாந்தை பகுதியை சேர்ந்த சதாசிவம் சசிக்குமார் (வயது – 46) என்பவரே உயிரிழந்தார்.

காங்கேசன்துறையில் இருந்து , கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்துடனேயே இந்த விபத்து இடம்பெற்றது.

சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

READ MORE >>>  காரில் சென்ற பொலிஸ் அதிகாரியை பலியெடுத்த டிப்பர்
Previous articleவியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்களுடன் வந்த நந்தன் வேலுப்பிள்ளை என்பவரால் ஊடகவியலாளர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி
Next articleஒரு லீட்டர் பாலின் விலை 100 ரூபாயாக அதிகரிப்பு