Home Tamil News முல்லைத்தீவு அளம்பில் பகுதியினை பெரும் சோகத்தில் ஆழ்த்திய 3 சகோதரர்களின் மரணம்

முல்லைத்தீவு அளம்பில் பகுதியினை பெரும் சோகத்தில் ஆழ்த்திய 3 சகோதரர்களின் மரணம்

முல்லைத்தீவு செம்மலைக்கடலில் குளிக்க சென்ற மூன்று சகோதரர்கள் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ள நிலையில் 3 ஆவது சகோதரனின் சடலம் மீட்கப்படுள்ளது.

முல்லைத்தீவு செம்மலை பிள்ளையார் கோவிலுக்கு நேரே உள்ள கடலில் நேற்று 10.05.2022 மாலை 2.00 மணியளவில் கடலில் குளிக்க சென்ற ஒரோ குடும்பத்தினை சேர்ந்த அண்ணன் இரண்டு தம்பிகள் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார்கள்.

alampil | முல்லைத்தீவு அளம்பில் பகுதியினை பெரும் சோகத்தில் ஆழ்த்திய 3 சகோதரர்களின் மரணம்

அளம்பில் பகுதியினை சேந்த நாதன் என்று அழைக்கப்படுபவரின் பிள்ளைகளான மூன்று ஆண் பிள்ளைகளுமே கடகில் மூழ்கி காணாமல் போயுள்ள நிலையில் 3 ஆவது சகோதரனின் சடலம் கொக்கிளாய் பகுதியில் மீட்கப்படுள்ளது.

சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்திற்கு பொலீசாரும் விரைந்துள்ளார்கள்.

செம்மலை பகுயினை சேர்ந்த இளைஞர்கள் 9 பேர் கடலில் குளிப்பதற்காக சென்றுள்ளார்கள் இதன் போது மூவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்கள்.

Screenshot 20220511 | முல்லைத்தீவு அளம்பில் பகுதியினை பெரும் சோகத்தில் ஆழ்த்திய 3 சகோதரர்களின் மரணம்

அளம்பில் பகுதியினை சேர்ந்த ஒரேகுடும்பத்தினை சேர்ந்த 29 அகவையுடைய பத்மநாதன் கிளின்ரன், 26 அகவையுடைய பத்மநாதன் விஜித், 23 அகவையுடைய பத்மநாதன் விலிந்திரன் ஆகிய மூன்று சகோதரர்களே கடலில் காணாமல் போயுள்ள நிலையில் மேலும் 2 சகோதரர்களை தேடும்பனியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளார்.

நேற்று இரவாகியும் 9.00 மணிவரையும் எதுவும் கிடைக்காத நிலையில் பிரதேச இளைஞர்கள், கிராம மக்கள், மீனவர்கள் தேடும் நடவடிக்கையினை முன்னெடுத்து வந்த நிலையில் இன்று காலை 3 ஆவது சகோதரனின் சடலம் மீட்கப்படுள்ளது.

alampil 1 | முல்லைத்தீவு அளம்பில் பகுதியினை பெரும் சோகத்தில் ஆழ்த்திய 3 சகோதரர்களின் மரணம்

READ MORE >>>  கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் கால்வாய்க்குள் சடலம்
Previous articleகமல்ஹாசனின் ‘விக்ரம்’ ஆடியோ பற்றி வெளியான அப்டேட் இதோ !!
Next articleவன்முறையை ஏவி விட்டு, ஓடி ஒழிந்தாரா அதாவுல்லா..?