Home Accident News மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளிய டிப்பர்! தெய்வாதீனமாக தப்பிய இரு பெண்கள், சாரதி கைது

மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளிய டிப்பர்! தெய்வாதீனமாக தப்பிய இரு பெண்கள், சாரதி கைது

யாழ்.வட்டுக்கோட்டை சந்தியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் இரு பெண்கள் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர். எனினும் மோட்டார் சைக்கிள் சேதமடைந்துள்ளது.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

மாதகலை சேர்ந்த சித்தியும் (வயது 39) பெறா மகளும் (வயது 20) அராலியில் உள்ள உறவினர்களது வீட்டிற்கு பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்றுவிட்டு வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தனர்.

இதன்போது காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் வாகனம் வட்டுக்கோட்டை சந்தியில் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் மோட்டார் சைக்கிள் சேதமாகியுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு பெண்களுக்கும் காயங்கள் எதுவுமின்றி தெய்வாதீனமாக தப்பியுள்ளனர். விபத்தினை ஏற்படுத்திய டிப்பர் சாரதி வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

READ MORE >>>  ரூ.4 கோடி பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் மன்னார் நபர் சிக்கினார்!
Previous articleபோதைப் பொருளால் அழியும் யாழ்ப்பாணம் ! 20 கிராமங்களில் அதிக அடிமைகள், 10 பேர் பலி, அதிர்ச்சி தகவல் வெளியானது
Next articleயாழில் ஹெரோயினுக்கு அடிமையான 14 வயது சிறுவனால் 7 வயது சிறுமி துஸ்பிரயோகம்!! சிறுவனையும் விட்டு வைக்காத இளைஞர்கள்