யாழ் நீதிமன்றத்தில் கடந்த இரு வாரங்களிற்கு முன்னர் தனது தந்தையை பிணை எடுக்க சென்ற இளம் பெண் ஒருவரின் தொலைபேசி இலக்கத்தினை பெற்றுக்கொண்ட எழுதுனர் ஒருவர் பாலியல் இலஞ்சத்தினை பெற்றுக்கொள்ளும் நோக்கில் குறித்த இளம் பெண்ணை தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளமை ஆதாரங்கள் மூலம் நிருபணமாகியுள்ளது.
இந்நிலையில் குறித்த யுவதி அதற்கு எதிர்ப்பு வெளியிட்டு வந்துள்ள நிலையில் குறித்த நபரால் பெண்ணிற்கு மிரட்டல்கள் வற்புறுத்தல்கள் தொடர்ந்துள்ள நிலையில் குறித்த வழக்கும் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் குறித்த பெண்ணினால் பிரபல வழக்கறிஞர்கள் சிலரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களும் குறித்த எழுதுனரை காப்பாற்றும் நோக்கில் பின்னடித்ததாக தெரியவருகின்றது.
பின்னர் பிரபல பெண் வழக்கறிஞர் ஒருவர் குறித்த நபரிற்கு எதிராக வழக்காட முன்னிலையானதை தொடர்ந்து வரும் திங்கள் கிழமை குறித்த வழக்கு விசாரணைக்கு வருகின்றது.
இதேவேளை. பாலியல் வற்புறுத்தல்கள் மிரட்டல்கள் தொடர்பான ஆதாரங்களுடன் சமர்ப்பிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளியை ஒருசில வழக்கறிஞர்கள் காப்பாற்ற முற்பட்டது போல வழக்கின் தீர்ப்பும் எவ்வாறு அமையப்போகின்றது என்பதனை பொறுத்து எமது அடுத்த பதிவில் குறித்த பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான ஆதாரங்களும் முன்னிலையாக பின்னடித்த வழக்கறிஞர்கள் தொடர்பான விபரங்களும் வெளியாகும்.