Home Tamil News யாழில் பெண்களின் கைப்பையுடன் நடமாடிய இளைஞன்!! 20 இலட்ச ரூபாய் பெறுமதியான நகைகளும், ஹெரோய்ன் போதைப்பொருளும்...

யாழில் பெண்களின் கைப்பையுடன் நடமாடிய இளைஞன்!! 20 இலட்ச ரூபாய் பெறுமதியான நகைகளும், ஹெரோய்ன் போதைப்பொருளும் மீட்பு

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்துக்கு அருகில் பெண்கள் பாவிக்கும் கைப்பையுடன் நடமாடிய இளைஞனிடம் இருந்து சுமார் 20 இலட்ச ரூபாய் பெறுமதியான நகைகளும், ஹெரோய்ன் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளன.

மாவட்டச் செயலகத்திற்கு அருகாமையில் நேற்று திங்கட்கிழமை (13) மாலை பெண்கள் பாவிக்கும் கைப்பையுடன் (ஹேண்ட்பேக்) சந்தேகத்துக்கு இடமான முறையில் இளைஞன் ஒருவன் நடமாடியுள்ளான்.

அது தொடர்பில் தகவல் அறிந்த யாழ்ப்பாண பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் சம்பவ இடத்துக்குச் சென்று, சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடிய இளைஞனிடம் விசாரணைகளை முன்னெடுத்து, அவரது உடமைகளை சோதனையிட்டனர்.

அதன்போது, குருநகர் பகுதியை சேர்ந்த இளைஞன் 24 வயதுடையவர் என்றும், இளைஞன் வைத்திருந்த பெண்களின் கைப்பையினுள் சுமார் 08 கிராம் ஹெரோய்ன் போதைப்பொருள் மற்றும் சுமார் 20 இலட்ச ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் என்பன காணப்பட்டன என பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து இளைஞனை, யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

READ MORE >>>  கோவிட் உறுதிப்படுத்தப்பட்ட தாய் மற்றும் மகள் தப்பியோட்டம்
Previous articleபெண் பொலிஸார் குளிப்​பதை மறைந்திருந்து பார்த்த சார்ஜென்ட்!
Next articleயாழ் நோக்கி பயணித்த புகைரதத்தில் மோதி குடும்பஸ்த்தர் பலி