Home Local news யாழ். – வவுனியா பேருந்தில் பயணித்த யுவதியை பிளேட்டினால் வெட்டிய இளைஞன்

யாழ். – வவுனியா பேருந்தில் பயணித்த யுவதியை பிளேட்டினால் வெட்டிய இளைஞன்

பேருந்தில் இளம் பெண்ணொருவரை பிளேட்டினால் வெட்டி காயப்படுத்திய இளைஞனை சக பயணிகள் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பேருந்தில் சன நெரிசலில் இளைஞன் தனக்கு முன்னால் நின்ற யுவதியை பிளேட்டினால் வெட்டி காயப்படுத்தியுள்ளார்.

காயத்திற்கு உள்ளான யுவதி சத்தமிடவே சக பயணிகள் சுதாகரித்து பிளேட்டினால் வெட்டிய இளைஞனை பேருந்தினுள் மடக்கி பிடித்தனர்.

இளைஞனை மடக்கி பிடித்த சக பயணிகள், யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாழ் பொலிஸ் காவலரணில் ஒப்படைத்தனர்.

READ MORE >>>  ரம்புக்கனை சம்பவம் : ஆழ்ந்த மனஉளைச்சலுக்கு ஆளான பிரதமர்
Previous articleபோதைப்பாக்குடன் பாடசாலை சென்ற மாணவன் கையை அறுத்துக்கொண்டான்
Next articleபலாலியில் மாணவியின் தங்கச்சங்கிலி அறுத்த இராணுவச்சிப்பாய் மடக்கிப்பிடிக்கப்பட்டு நையப்புடைப்பு!