67 வயதுடைய பெண்ணை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு – முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 67 வயதுடைய பெண் ஒருவர் தனது பேத்தியின் 38 வயதுடைய கணவர், தனக்கு பலவந்தமாக மதுபானம் பருக்கி துஷ்பிரயோகம் செய்ததாக முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் 08.05.2022 அன்று முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டையடுத்து முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் பெண்ணொருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் 38 வயதுடைய நபர் ஒருவர் முள்ளியவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் மாங்குளம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.