Home Local news 18 வருடங்களாக பெண்களை வைத்து விபச்சார வர்த்தகத்தில் ஈடுபட்டவர் கைது

18 வருடங்களாக பெண்களை வைத்து விபச்சார வர்த்தகத்தில் ஈடுபட்டவர் கைது

18 வருடங்களாக பெண்களை வைத்து விபச்சார வர்த்தகத்தில் ஈடுபட்டவர் கைது

18 வருடங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெண்களைப் பயன்படுத்தி விபச்சார வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த 36 வயதுடைய நபரொருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 15 வயது சிறுமியை பாலியல் நடவடிக்கைகளுக்காக ஒன்லைனில் விற்றதற்காக சந்தேகநபர் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தால் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் சிறுமியை பாலியல் நடவடிக்கைகளுக்காக விற்று பணம் சம்பாதித்ததாகவும், மோசடிக்கு உதவியதாகவும் தெரியவந்ததையடுத்து, சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டது.

சந்தேகநபர் சிறுமியை விற்று பணம் சம்பாதிப்பது மட்டுமல்லாமல் அவரது தாயாரையும் பாலியல் நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபருக்கு நிரந்தர வேலையோ அல்லது நிரந்தர வதிவிடமோ இல்லை எனவும், சுமார் 18 வருடங்களாக பெண்கள் மற்றும் சிறுமிகளை பயன்படுத்தி இந்த மோசடியை நடத்தி வந்தவர் எனவும் விசாரணைகளை அடுத்து தெரியவந்துள்ளது.

விபச்சார வர்த்தகத்தில்

சந்தேக நபரின் 8 வங்கிக் கணக்குகளில் ரூ. 45.6 மில்லியன் (ரூ.45,681,905) பணம் வைப்பிலிடப்பட்டிருந்தது.

மேலும், கண்டி மற்றும் கம்பஹா பிரதேசங்களில் விபச்சார விடுதிகளை நடத்தி வந்த மற்றொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் கொழும்பில் இருந்து வாடகைக்கு எடுக்கப்பட்ட வாகனங்களை பயன்படுத்தி நடமாடும் விபச்சார விடுதிகளை நடத்தி வந்தார்.

சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் சந்தேக நபரை வாதுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்திய பின்னர் மார்ச் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

READ MORE >>>  10 வருடங்களாக 2 மாணவ சிறுமிகள் மீது 41 வயதான மச்சானின் மோசமான வெறிச் செயல்!
Previous articleபயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் !! ஆளுனரின் வாக்குறுதியை ஏற்க மறுத்து போராட்டம்
Next articleசட்டவிரோத சொத்துகள் பறிமுதல்! – இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய அதிரடி நடவடிக்கை