மன்னாரில் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வீதியோரத்தில் உள்ள மரமொன்றின் மீது மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
மன்னார் – மதவாச்சி பிரதான வீதி இசைமாலைதாழ்வு பகுதியில் இன்று (13) காலை 9 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மன்னார் நோக்கி சென்று கொண்டிருந்த பட்டா ரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கு அருகில் உள்ள மரத்தில் மோதி விபத்துக்கு உள்ளானது.
குறித்த விபத்தில் சாரதிக்கு அருகில் இருந்து பயணித்தவர் பலியாகியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகனத்தை செலுத்தி சென்ற சாரதிக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லையெனவும், அவர் மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சடலம் மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்த முருங்கன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்