Home Local news 1கிலோ 532 கிராம் கொகென் போதைப்பொருள் மற்றும் அதனை வைத்திருந்த சந்தேக நபர்கள் கைது

1கிலோ 532 கிராம் கொகென் போதைப்பொருள் மற்றும் அதனை வைத்திருந்த சந்தேக நபர்கள் கைது

மன்னார் மாவட்ட குற்ற தடுப்பு பிரிவு பொலிசாரினால் 1கிலோ 532 கிராம் கொகென் போதைப்பொருள் மற்றும் அதனை வைத்திருந்த சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

2022.10.17 தேதி மன்னார் மாவட்ட குற்ற தடுப்பு பிரிவிற்கு கிடைத்த ரகசிய தகவலின் பிரகாரம் புத்தளம் நுரைச்சோலை பகுதிக்கு தேடுதல் நடவடிக்கைக்காக சென்றிருந்த மன்னார் மாவட்ட குற்ற தடுப்பு பிரிவினர் கொக்கேன் போதைபொருள் ஒரு கிலோ 26 கிராமினை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் புத்தளம் மற்றும் கல்பிட்டியினை சேர்ந்த முறையே 25, 26, 34, 36 ,53 வயது உடைய ஐந்து சந்தேகநபர்களை கைது செய்ததுடன் அவர்களிடம் மேற்கொண்ட மேலதிக விசாரணையில் அருகுகுண்டு நானாட்டான் பகுதியினைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவரின் வீட்டில் இருந்து கொகேன் வகை போதைப் பொருள் 506கிராம் ம்ஷாகைப்பற்றப்பட்டுள்ளது

அதனைத் தொடர்ந்து வழக்குப் பொருட்கள் மற்றும் சந்தேக நபர்கள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம்பெற்று கொண்டு இருக்கின்றன.

வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் சந்தணஅழக்கோன்,வடமாகாண பொலிஸ்மா அதிபர் பியந்த வீரசூரியவின் மேற்பார்வையில் மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் துல்சான் நாகாவத்த வின் பணிப்பில், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பிரபாத்விதானகே, மன்னார் மாவட்ட குற்றதடுப்புபிரிவு பிரிவு பொறுப்பதிகாரி பொ.ப.ரத்னாயக தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்படி கொக்கேன் போதை பொருளினை கைப்பற்றியும், அதனை உடைமையில் வைத்திருந்த சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளதுடன், இன்றைய தினம்(19)மன்னார் மாவட்ட நீதிமன்றில் கையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

READ MORE >>>  திடுக்கிட வைக்கும் சிறுநீரக மோசடி: பொலிஸ் விசாரணை ஆரம்பம்!
Previous articleவெளிநாடுகளில் பாலியல் தொழிலுக்கு விற்கப்படும் இலங்கை பெண்கள்! பெண்ணொருவர் வழங்கிய பரபரப்பு தகவல்
Next articleஅடகு வைத்த நகையை திருப்பி கொடுக்க மறுத்த நகைக்கடை உரிமையாளர் மீது கோடாரியால் தாக்குதல்