Home Local news 15 வயது மாணவியின் விபரீத முடிவால் அதிர்ச்சி!

15 வயது மாணவியின் விபரீத முடிவால் அதிர்ச்சி!

மீகொட பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் 9 ஆம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் மீகொட, ஹெட்டியாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த ஹஷினி தில்ருக்‌ஷி என்ற 15 வயது மாணவியே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மாணவியின் தாய் பணிப்பெண்ணாக மத்திய கிழக்கு நாடொன்றுக்கு சென்றிருப்பதாகவும், தந்தை குடும்பத்தை விட்டுப் பிரிந்திருப்பதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த மாணவி தனது மூத்த சகோதரர்கள் இருவருடன் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் இளைய சகோதரர் புதன்கிழமை இரவு கடமையின் பின்னர் வீடு திரும்பியபோது தனது தங்கை தூக்கில் தொங்குவதை கண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

READ MORE >>>  கல்லாவில் கை வைத்தவர் கம்பத்தில் கட்டிவைப்பு
Previous articleபிக்குவாக இலங்கை வந்த பிரஜை; காவி உடை களைந்து காதலியுடன் வாழ்க்கை!
Next articleமுச்சக்கர வண்டிக்கு தீ வைப்பு