Home world news 66 பேரை பலிகொண்ட விமான விபத்து – விமானியின் இந்த கவனக்குறைவான செயலே காரணம் !!...

66 பேரை பலிகொண்ட விமான விபத்து – விமானியின் இந்த கவனக்குறைவான செயலே காரணம் !! அதிர்ச்சி உண்மை !!

கடந்த 2016ம் ஆண்டு உலகையே உலுக்கிய எகிப்து ஏர் விமானம் எப்படி விபத்துக்குள்ளானது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ஏர்பஸ் ஏ320 ரக விமானம் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இருந்து எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு 2016 மே மாதம் புறப்பட்டது. மத்தியதரைக் கடலில் உள்ள கிரேட் தீவு அருகே விமானம் மர்மமான முறையில் விழுந்து நொறுங்கியது. விமானத்தில் பயணம் செய்த 66 பேர், எகிப்தை சேர்ந்த 40 பேரும், பிரான்ஸை சேர்ந்த 15 பேரும், ஈராக் மற்றும் கனடாவை சேர்ந்த தலா 2 பேரும், அல்ஜீரியா, பெல்ஜியம், பிரிட்டன், சாட், போர்ச்சுகல், சவுதி அரேபியா, சூடான் ஆகிய நாடுகளை சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 66 பேர் விமானத்தில் இருந்தனர். ஒரு விமான விபத்து.

2003 ஆம் ஆண்டு சேவையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த விமானம் 30 முதல் 40 வருடங்கள் சேவை ஆயுளைக் கொண்டதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது. விபத்து நடந்த அன்று விமானம் 37,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது மர்மமான முறையில் விபத்துக்குள்ளானது. இதையடுத்து விமானத்தின் கருப்பு பெட்டியை கண்டுபிடிக்க நிபுணர் குழு களம் இறங்கியது. கிரேக்கத்தில் ஆழ்கடலில் இருந்து கருப்புப் பெட்டியை நிபுணர்கள் மீட்டுள்ளனர்.

விபத்தின் நடுவில் விமானி சிகரெட்டை பற்ற வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை, இது முதலில் தீவிரவாத தாக்குதலாக கருதப்பட்டது. ஆனால், விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், விமானி சிகரெட்டை பற்ற வைத்ததால் விபத்து ஏற்பட்டது என்பது தற்போது தெரியவந்துள்ளது.

READ MORE >>>  இலங்கை முழுவதும் இன்று மின்சாரம் தடைப்பட்டமைக்கான காரணம் என்ன?

2016 ஆம் ஆண்டு உலகையே உலுக்கிய எகிப்து ஏர் விமான விபத்துக்கு விமானிதான் காரணம் என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

Previous articleசிவாங்கி இண்டஸ்ட்ரிக்கு வந்து இத்தனை வருடங்கள் ஆனதா ?
Next articleதொடரும் அஜித் விஜய் நட்பு.! அஜித் பிறந்த நாளுக்கு விஜய் கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ் பரிசு என்ன தெரியுமா ?